Welcome to Kids Club International
How can I help you?
Together, we create a brighter future.
இருபத்து ஐந்து ஆண்டுகளாக தென்னிந்திய பின்னலாடை உற்பத்தியாளர்களின் சங்கத்தின் ஒப்பற்ற தலைவராகத் தொடர்ந்து பணியாற்றிவரும் திரு. மோகன் கந்தசாமியைப் பற்றி எழுதுவதென்றால் ஒரு பெரிய புத்தகமே தேவை, ஆனால், இந்த மலரின் அளவு ஏற்க சில விபரங்களை மட்டுமே அன்னாரைப் பற்றித் தர இயலும். இரத்தினச் சுருக்கமாகக் குறிப்பிட வேண்டுமானால் திரு. மோகன் கந்தசாமி ஒரு செயல் வீரர், கர்மயோகத்தைப் பின்பற்றி மற்றவர்களுக்காகவே வாழ்ந்திட தன் வாழ்க்கையினை வகுத்துக் கொண்டவர்.நாட்டுப் பற்று உடையவராதலால் பல தியாகங்களை நாட்டுக்காகவும், சமுதாயத்திற்காகவும் புரிந்தவர். தொழிலாளர்களையும் தொழிலையும் (தொழில் செய்வோரையும்) இரு கண்களாகக் கருதும் இலட்சியம் கொண்டவர்.
எந்தப் பிரச்சினையையும் சமாதான வழியில் பேச்சுவார்த்தைகள் மூலம்
பேசித் தீர்வு காணும் பழக்கம் உள்ளவராதலால் அதனையே ஒரு இலட்சியமாகக் கொண்டவர்.
கடினமான உழைப்பும், ஈடுபாடும் மட்டுமே ஒருவரின் வெற்றிக்குக் காரணம் என்பதை உணர்ந்து
தன்னுடைய வாழ்க்கையில் அந்தப் பண்புகளைக் கடைப்பிடித்து வருபவர். அன்பும், அடக்கமும்
அமைதியும் கொண்டவர்.
எனவே, சகதொழிலன்பர்கள் மற்றும் தொழிலாளர்களும் இவரிடம்
காண்பிக்கும் மரியாதை இவருடைய செல்வாக்கு தமிழ் நாட்டில் மட்டுமின்றி இந்தியத்
துணைக்கண்டத்திலுள்ள சிறுதொழில் துறையில் இவரது செல்வாக்கு உயர்ந்திருக்கிறது.
சுருங்கக் கூறினால் திரு. மோகன் கந்தசாமி பல துறைகளில் பரிணமிக்கும் பிரமுகர்
(multifaceted personality) ஆவார். தொழில், வாணிபம், அரசியல், நாட்டுப்பற்று, ஆன்மீகம், சமூக
சேவை, தமிழ் இலக்கியம், விளையாட்டு (sports) முதலிய துறைகளில் தலைமைப் பண்புகளுக்கு
இவர் இலக்கணமாகத் திகழ்கிறார்.
திரு. மோகன் கந்தசாமி 1933-ம் ஆண்டு கோவையை அடுத்த மதுக்கரைக்கு அருகில்
உள்ள போடிபாளையம் கிராமத்தில் பிறந்தார். விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த திரு. பழனிசாமிக்
கவுண்டர் இவரது தந்தை. திருமதி பூவாத்தாள் இவருடைய தாய். இவருக்கு ஒரு தமக்கை, இரண்டு
தங்கைகள் மணமாகி நல்ல நிலைமையில் உள்ளனர்.
இவர் சிறு வயதில் ஆறாம் வகுப்பு வரை கிராமப் பள்ளியில் படித்தார். இவருடைய ஆசிரியர்
ஒருவர் கேரளாவைச் சேர்ந்தவர். இந்த ஆசிரியர் பள்ளி நேரம் போக மாலை வேளையில் மாணவ
மாணவிகளுக்கு இராமாயணக் கதைகளைச் சொல்லி ஒழுக்கமான நல்வாழ்க்கை நடத்துவதற்கு
ஆர்வம் ஊட்டினாரென்று திரு. மோகன் நினைவு கூறுகிறார். இந்தப் பள்ளிப் பருவத்தில்
இவருடைய நேர்மையான நீதியான வாழ்க்கைக்கு வித்து இடப்பட்டதாகக் கூறுகிறார்.
பிறகு, கோவையில் சிட்டி முனிசிபல் உயர்நிலைப் பள்ளியில் இரண்டு ஆண்டுகள் இவர்
படித்திருக்கிறார். அதற்குப் பிறகு பொள்ளாச்சி முனிசிபல் உயர்நிலைப் பள்ளியில் இவருடைய
படிப்புத் தொடர்ந்தது. உயர்நிலைப் பள்ளியில் படிக்கும்போதுதான் பொள்ளாச்சி அருட்செல்வர்
திரு. நா. மகாலிங்கம் அவர்கள் நடத்திய இளைஞர் காங்கிரஸ் இயக்கத்தில் கவர்ச்சியும், பற்றும்
ஏற்பட்டது. திரு. மகாலிங்கத்தின் எளிமை, அன்பு, நாட்டுப்பற்று, சேவை மனப்பான்மை போன்ற
பண்புகள் திரு. மோகனைக் கவர்ந்தன. எனவே, திரு. என்.எம். அவர்களை திரு. மோகன் மானசீக
குருவாக ஏற்று அவருடைய இலட்சியங்கள் சிலவற்றைப் பின்பற்றத் தொடங்கினார்.
பிறகு, திரு. மோகன் பி.எஸ்.ஜி. கலைக்கல்லூரியில் படிப்பைத் தொடர்ந்தார். இரண்டு
ஆண்டுகள் கல்லூரிப் படிப்பு நீடித்தது. கல்லூரியில் ஹாஸ்டல் செயலாளராகவும், சமூக சேவை
செயலாளராகவும் கௌரவப் பொறுப்புகளை ஏற்றுத் திறம்படச் சேவை செய்தார். அப்பொழுது
இவருடைய தலைமைப் பண்புகள் உருவாகின. இவருக்கு நாடகத்திலும் ஈடுபாடு இருந்தது. நாடகச்
சங்கத்தின் செயலாளராகவும் இவர் தெளரவப் பணி ஆற்றினார்.
கல்லூரி வாழ்க்கையின் நிகழ்ச்சிகளை நினைவு கூறும்பொழுது மறக்கமுடியாத சம்பவம்
(Peak experience) ஒன்றினை இவர் நினைவு கூறுகிறார். அதாவது ஒருநாள் இரவு மாணவர்
நடிக்கும் நாடகத்தில் வீரகேசரியின் பாத்திரத்தை திரு. மோகன் நடித்தார். நல்ல உயரமும், உடல்
கட்டும் பெற்ற இவர் வீரகேசரி பாத்திரத்தை திறமையாக நடித்து சபையினர் கரகோஷங்களைப்
பெற்றார். நாடகம் முடிந்து விடுதிக்கு வந்தார், சுமார் 10 மணி இருக்குமாம். கல்லூரி
முதல்வரிடமிருந்து அழைப்பு வந்தது. மாணவர்கள் சத்தம் செய்ததால் ஏற்பட்ட கட்டுப்பாடற்ற
நிலையை அறிந்ததால் முதல்வர் தனக்கு தண்டனை கொடுக்கத்தான் தன்னை அழைத்ததாக திரு.
மோகன் நினைக்கிறார். ஆனால், அதற்கு மாறாக முதல்வர் பி.ஆர். கிருஷ்ணமூர்த்தி நாயுடு இவரது
நடிப்புத் திறமையைப் பாராட்டினாராம், அதோடு நில்லாமல் தனக்குக் கண்ஏறு பட்டுவிட்டதால்
விபரீதம் ஏற்படக்கூடுமென்று அஞ்சி முதல்வர் தன்னுடைய மனைவியை அழைத்து மோகனுக்கு
மிளகாய் சுற்றி அடுப்பில் இட்டு திருஷ்டி கழிக்குமாறு கூறினாராம். அந்த அம்மையாரும்
இவருக்குத் திருஷ்டி கழித்தாராம். தன்னுடைய தாய்கூட இவ்வாறு தன் மீது அக்கறை எடுத்துக்
கொள்ளவில்லையென்று இந்த நிகழ்ச்சி தன்னுடைய நினைவில் இன்றும் பசுமையாக நிற்பதாக
திரு. மோகன் கூறுகிறார்.
இவ்வாறான நிகழ்ச்சிகள் நடந்த பி.எஸ்.ஜி. கலைக்கல்லூரியின் மீது திரு. மோகனுக்கு தனி மதிப்பு. அதன் நிர்வாக உறுப்பினர்கள் மீது அலாதியான மரியாதை. கல்லூரி நிகழ்ச்சிகளின் ஈடுபாட்டினால் இக்கல்லூரியின் நிர்வாகக் குழுவில் இவருக்கு பதவி அளிக்கப்பட்டிருக்கிறது. கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்திலும் (Alumni Association) இவருக்கு நிர்வாகப் பொறுப்பு அளிக்கப்பட்டிருக்கிறது. 1955-ம் ஆண்டு கல்லூரிப் படிப்புக்குப் பிறகு, இவர் கிராமத்திற்குத் திரும்பினார். அங்கே மாலை நேரங்களில் சிறுவர், சிறுமியர், ஆண், பெண்களுக்கு இரவு நேரப் பள்ளி நடத்தி சமுதாயத்திற்கு சேவை செய்தார். இவ்வாறு சமூகப் பணியில் இவருக்கு அனுபவம் ஏற்பட்டது, ஆர்வமும் அதிகரித்தது. 1956-ம் ஆண்டு இவருக்கு மணம் நடைபெற்றது. மனைவியின் பெயர் திருமதி. ரத்தினம் அம்மாள். இவருக்கு இரண்டு புத்திரர்கள். திரு. கார்த்திகேயன், திரு. ரமேஷ் ஆவர். திருப்பூரில் மணம் நடைபெற்றதால் அவ்வூரிலேயே தொழில் தொடங்குவதற்கு இவர் முனைந்தார். முதலில் பனியன் தொழில் நிறுவனம் தொடங்கினார். பிறகு மோகன் நிட்டிங் கம்பெனிக்கு இவர் 1957-ல் பங்குதாரராகச் சேர்ந்தார். பிறகு மோகன் நிட்டிங் கம்பெனிக்கு முதலாளி ஆனார். கடும் உழைப்பும், ஈடுபாடும், விடா முயற்சியுமே இவருடைய தொழில் வெற்றிக்குக் காரணம்.
முதன்முதலில் பனியன் மற்றும் உள்ளாடைகளுக்கு IS மார்க் இந்திய தரக் கட்டுப்பாடு
நிறுவனம் அளிக்கும் முத்திரையைப் பெற்றவர் திரு. மோகன் கந்தசாமிதான்.
மோகன் நிட்டிங் கம்பெனி கர்நாடக மாநில அரசு மைசூரில் நடத்திய தசரா
பொருட்காட்சியில் பங்கு எடுத்தது. மூன்று ஆண்டுகள் பங்கெடுத்த இந்தப் பொருட்காட்சியில்
மோகன் நிட்டிங் கம்பெனிக்கு இரண்டு முறை தங்கப்பதக்கங்கள் கிடைத்தன. இதுவே மோகன்
கம்பெனியின் பின்னலாடைப் பொருட்களின் உயர்தரத்துக்குச் சான்றாகும். ஒருமுறை ஸ்டால்
அலங்கரிப்புக்காக இவர் கம்பெனிக்கு பரிசு வழங்கப்பட்டது. இவருடைய ஸ்டாலுக்கு முன்னாள்
முதல்வர் திரு. அண்ணாதுரை வருகை தந்து சிறப்பித்தமை இங்கு குறிப்பிடத்தக்கது. அவருடைய
பாராட்டையும் இவருடைய கம்பெனி பெற்றது.
1969-ம் ஆண்டு திரு. மோகன் தன்னுடைய பனியன்களை கானா (Ghana) நாட்டிற்கு ஏற்றுமதி
செய்தார். இது பரீட்சார்த்தமாக செய்யப்பட்ட ஏற்றுமதி ஆகும். திருப்பூரில் பனியன்களை
முதன்முதலாக ஏற்றுமதி செய்து முன்னோடியாக விளங்குபவர் திரு. மோகன் கந்தசாமியே. பிறகு
1972-ம் ஆண்டு அமெரிக்க நாட்டுக்குப் பெரிய அளவில் இவர் ஏற்றுமதி செய்தார். அன்று இருந்து
இவருடைய ஏற்றுமதி வர்த்தகம் வளர்ந்து கொண்டு வருகிறது.
மேலும் இதர பின்னலாடை உற்பத்தியாளர்கள் தங்களுடைய பனியன்களை மற்றும் இதர
ஓசைரி உள்ளாடைகளை ஏற்றுமதி செய்வதற்கு ஊக்குவித்து, திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதி
வர்த்தகத்திற்கு வித்து ஊன்றினார். இதன் விளைவாக ஆண்டுதோறும் திருப்பூர் ஓசைரி ஏற்றுமதி
வளர்ந்து கொண்டே வருகிறது.சுமார் ரூ.100 கோடியிலிருந்து இன்று சுமார் ரூ.450 கோடி
மதிப்புள்ள பின்னலாடை பொருட்கள் திருப்பூரிலிருந்து உலகத்திலுள்ள பல நாடுகளுக்கு, குறிப்பாக
வளர்ந்த மேலை நாடுகளுக்கு ஏற்றுமதியாகிறது.
1968-ம் ஆண்டு திரு. மோகன் கந்தசாமி தென்னிந்திய ஓசைரி உற்பத்தியாளர் சங்கத்தின்
தலைவராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றார். அன்று முதல் இன்று வரை 25 ஆண்டுகளாகத் தொடர்ந்து
போட்டியில்லாமல் ஏகமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுவரும் சங்கத் தலைவர் திரு. மோகன் ஆவார்.
வெள்ளிவிழாக் கண்ட இவருடைய சாதனைகள் பின்னலாடைத் தொழிலின் வளர்ச்சிக்கும்,
தொழிலில் ஏற்பட்ட சிக்கல்களையும் பிரச்சினைகளையும் சுமுகமாகத் தீர்த்துக் கொடுக்க
உழைத்துவரும் சங்கத் தலைவர் திரு. மோகனுக்கு இன்று பின்னலாடைத் தொழிலன்பர்கள்
பாராட்டு விழா எடுக்கிறார்கள்.
பனியன் தொழிலுக்கு பிரச்சினைகள் ஏற்பட்ட பொழுதெல்லாம் இவர் முன்நின்று
குழுக்களுக்கு (delegations) தலைமை வகித்து சம்பந்தப்பட்ட அரசு துறைகளின் அதிகாரிகளையும்
அமைச்சர்களையும் சந்தித்து நிறுவனங்களுடனும் தொடர்பு கொண்டு பிரச்சினைகளுக்கு
சுமுகமாகத் தீர்வுகள் கண்டிருக்கிறார். இந்தத் துறையில் இவருடைய சாதனைப் பட்டியல்
பெரியதாகும். திருப்பூரில் பனியன் தொழில் வளர்ந்து பனியன் நகரம் (Hosiery Town) என்கிற
புகழைத் தேடித் தந்தவர் திரு. மோகன் கந்தசாமிதான். சங்கத்தின் வளர்ச்சிக்கும்,
சாதனைகளுக்கும் காரணம் தனக்கு சங்க நிர்வாகிகளும், உறுப்பினர்களும் கொடுத்த ஒத்துழைப்பும்
இன்சொல்லும், மனிதாபிமானமும், மக்கள் தொடர்புத் திறமை (public relations skill)
முதலியவைகளே இவருடைய வெற்றிகளுக்குக் காரணங்கள் ஆவன.
பின்னலாடைத் தொழில் வளர்ச்சி திருப்பூரில் ஏற்பட்டதற்கு இவருடைய முயற்சியும், சேவையும் காரணம் என்பதற்கு ஒரு சான்று குறிப்பிடலாம். சுமார் 260 பின்னலாடைத் தொழிற்சாலைகள் கொண்ட அன்றைய திருப்பூரில் இப்பொழுது சுமார் 2,000 பனியன் ஆலைகள் இயங்குகின்றன என்றால் இதைக் காட்டிலும் வேறு சான்று தேவையில்லை. பின்னலாடை ஏற்றுமதி வாணிபம் பெருகி வந்ததை உணர்ந்த அரசினர் திருப்பூரிலேயே அப்பேரல் எக்ஸ்போர்ட் கவுன்சிலின் கிளை அலுவலகத்தைத் திறந்து உள்ளனர். இந்தக் கிளை அலுவலகத்தைத் திருப்பூருக்குக் கொண்டுவந்த சாதனையும் பெருமையும் திரு. மோகனுக்கே உரியவை. சிறு தொழில் அபிவிருத்திக் கார்ப்பரேஷன் (N.S.I.C)மூலம் விற்பனை உதவிகளையும், இயந்திரங்கள் உள்நாட்டில் தவணை முறையில் கொள்முதல் செய்தல், இறக்குமதி செய்தல் போன்ற உதவிகளைப் பனியன் தொழிலுக்குப் பெற்றுத்தந்த சாதனையும் திரு. மோகனையே சாரும்.
பனியன் தொழிலில் மந்தம் ஏற்பட்ட பொழுது, பனியன்களையும் இதர ஓசைரி உள்ளாடை-
களையும், நிக் (NIC) என்கிற NISC பொதுவான முத்திரையுடன் (trade) நாடு முழுவதும் விற்பனை
செய்வதற்கு NSIC நிறுவனம் பெரிதும் உதவிகள் செய்தது. இதற்கென கூட்டு விற்பனை நிறுவனம்
ஒன்று (consortium) நிறுவப்பட்டது. இந்த விற்பனை முறையால் பல பின்னலாடைத்
தொழிற்சாலைகள் பயன்பெற்றன. பலர் இலாபம் ஈட்டினர். இந்த சிறந்த பணியை முன்னின்று
ஆற்றியவர் திரு. மோகன். N.S.I.C நிறுவனம் பின்னலாடைகள் ஏற்றுமதி செய்வதற்கு அரிய
உதவிகள் செய்திருக்கிறது.
N.S.I.C நிறுவனம் பின்னலாடைப் பொருட்களை விற்பனை செய்ய வேண்டுமென்றால்
உள்ளாடைகள் உயர்ந்த தரமுள்ளவைகளாக இருக்கவேண்டும். எனவே, திரு. மோகன்
தலைமையில் சங்கத்தினர் இந்திய தரக்கட்டுப்பாடு நிறுவனத்தின் ISI ஆதரவையும், பணிகளையும்,
ஒத்துழைப்பையும் திருப்பூர் பனியன் தொழிலுக்குப் பெற்றுத் தந்தது மிகப்பெரிய சாதனையாகும்.
ஐ.எஸ்.ஐ (ISI தரக்கட்டுப்பாடு முத்திரை நம் உறுப்பினர் பலருக்கு வழங்கப்பட்டது. தரக்கட்டுப்பாடு
சான்றிதழ் பெற்றவர்கள் மட்டுமே ஏற்றுமதி வணிகம் செய்ய இயலும். அதில் வெற்றியும் காண
முடியும். எனவே ISI துறையினர் பின்னலாடைத் தொழிலுக்கு ஆற்றிய உதவி குறிப்பிடத்தக்கது.
இந்த அரிய சாதனையினை நிகழ்த்தியவரும் சங்கத் தலைவர் திரு. மோகன் ஆவார்.
T. ஷர்ட் போன்ற ஆடைகளை திருப்பூரிலிருந்து ஏற்றுமதி செய்வதற்கு N.S.I.C. நிறுவனம்
பெரிதும் உதவி செய்ததை நாம் நன்றியோடு நினைவு கூறுதல் வேண்டும். ஒருமுறை காலர்
ஷர்ட்டுகளை ஏற்றுமதி செய்யும் பேரத்தில் சில உறுப்பினர்களுக்கு ஒரு சிரச்சினை ஏற்பட்டது.
வெளிநாட்டு இறக்குமதியாளர்கள் கைவிட்டதால் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள இழப்பு பல
தொழில் அன்பர்களுக்கு விளைவதாயிருந்த சூழ்நிலையில் N.S.I.C நிறுவனம் முன்வந்து நமது
ஏற்றுமதியாளர்களின் சரக்கை ஏற்றுமதி செய்வதற்கு உதவியது. இந்த அரும் பணியினை
பின்னலாடைத் தொழிலிலன்பர்கள் மறக்க முடியாத சம்பவம் ஆகும். இந்தச் சாதனையைப்
புரிந்தவர் திரு. மோகன் கந்தசாமிதான். தேசீய சிறுதொழில் கார்ப்பரேஷன் தலைவர்களும்
(N.S.I.C) குறிப்பாக விற்பனை இயக்குநர் திரு. T. இராதாகிருஷ்ணனும் ஆற்றிய உதவிகளை
நினைவு கூறி நன்றி செலுத்தவதை நமது சங்கம் கடமையாகக் கருதுகிறது.
திரு. மோகன் ஓசைரி தொழிலுக்கு ஆற்றிய பணிகளின் சாதனைகளில் முக்கியமானது, பின்னலாடைப் பொருட்களுக்கு மத்திய கலால் வரி (central exclse duty) யினின்று வரிவிதிப்பு விலக்கு (exemption) வாங்கித் தந்தமை ஒன்றாகும். இன்று ஜனாதிபதியாக பதவியில் இருக்கும் திரு. R. வெங்கட்ராமன் அவர்கள் மத்திய நிதி அமைச்சராக இருந்தபொழுதுதான் பின்னலாடைத் தொழிலுக்குக் கலால் வரிவிலக்கு அளித்தார். நாடு முழுவதிலுமுள்ள பின்னலாடைத் தொழில்கள் பயன் பெற்றன. இந்தச் சாதனையும் திரு. மோகனுக்குத்தான் உரியது. தமிழ்நாடு ஆளுநராகப் பணிபுரிந்த டாக்டர் P.C. அலெக்சாண்டர் மத்திய தொழில் அமைச்சகத்தில் சிறு தொழில்கள் ஆணையராக (Development Commissioner SSI) பதவி வகித்தபொழுது பனியன் நிட்டிங் இயந்திரங்களை இறக்குமதி செய்வதற்குப் பேருதவி செய்தார். அதாவது இந்த இயந்திரங்களை சிரமம் இன்றி நேரடியாக இறக்குமதி செய்வதற்கு உதவியாக (Open General Licence) தனிப்பட்டியலில் அரசினர் சேர்ப்பதற்கு உதவி செய்தார். திருப்பூரைக் குட்டி ஜப்பான் என்று டாக்டர் அலெக்சாண்டர் வர்ணனை செய்வார்.
அவர் தமிழ்நாடு ஆளுநர் பதவியில் இருந்தபொழுதும் பின்னலாடைத் தொழிலுக்கு
வணிகவரிச் சலுகைகள் அளித்தார். சென்ட்ரல் விற்பனை வரியை 2 1/2 சதவிகிதத்திலிருந்து 21
சதவிகிதமாகக் குறைத்தார். தமிழ்நாடு விற்பனை வரியை 5 சதவிகிதத்திலிருந்து 3 சதவிகிதமாகக்
குறைத்து உதவி செய்தார். டாக்டர் அலெக்சாண்டரிடம் சலுகைகளையும் பெற்றுத் தந்தவர் திரு.
மோகன்தான் என்பதை நன்றியுடன் கூறுதல் வேண்டும். இவ்வமயம் ஒரு நிகழ்ச்சியை நினைவு
கூறுதல் பொருத்தமாகும். டாக்டர் அலெக்சாண்டர் ஆளுநர் பதவியில் அமர்ந்த பிறகு கோவை
மாவட்ட கலெக்டர் திரு. A.M. ராமன் அவர்கள் ஆளுநரைச் சந்தித்த பொழுது ஆளுநர் டாக்டர்
அலெக்சாண்டர் திரு. மோகன் கந்தசாமியை நினைவு கூர்ந்து அவரைப் பற்றி கலெக்டரிடம்
விசாரித்தார். இந்த சம்பவத்திலிருந்து திரு. மோகன் பின்னலாடைத் தொழிலுக்கு ஆற்றிய அரிய
சேவைகளும் சாதனைகளும் எத்துணை அரியவை என்பது புலனாகும்.
மற்றொரு அரிய சேவையினை நமது தொழிலுக்கு சங்கம் ஆற்றியது குறிப்பிடத் தக்கது..
1974-ம் ஆண்டு நூல் கட்டுப்பாடு இருந்த வேளையில் நூலை விநியோகம் செய்யும் பொறுப்பினை
அரசினர் குறிப்பாக ஜவுளித்துறை ஆணையர் சங்கத்திற்குக் கொடுத்தமை சங்கத்தின் திறமையான
நேர்மையான பணிகளுக்குச் சான்றாக அமைந்தது. இந்தப் பெருமையினை சங்கத்திற்குச் சேர்த்துத்
தந்த அரிய பணியும் திரு. மோகனுடையதுதான்.
திருப்பூர், மற்றும் தமிழ் நாட்டிலுள்ள பின்னலாடைத் தொழில்களுக்கு மட்டும் சேவை
செய்தல் போதாதென எண்ணிய திரு. மோகன் கந்தசாமிக்கு தேசீய அளவிலும் இத்தொழிலுக்கு
அரிய பணிகள் புரிந்திட வாய்ப்புக் கிட்டியது. இவரை பின்னலாடை உற்பத்தியாளர் சங்கங்களின்
பெடரேஷன் (FOHMA) இவரைத் தலைவராகத் தேர்ந்தெடுத்தது. சாதாரணமாக இந்தத் தலைமைப்
பதவி ஒருவருக்கு ஒரு ஆண்டு மட்டுமே கிடைக்கும். ஆனால் திரு. மோகன் FOHMA தலைவராக
மூன்று ஆண்டுகள் தொடர்ந்து பதவி வகித்து நாட்டிலுள்ள ஓசைரி தொழிலுக்கு
அரும்பணியாற்றினார். பெடரேஷன் ஸ்தாபக உறுப்பினர்களில் இவரும் ஒருவர். திரு. ஹரி கிஷோர்
ஜெயின், திரு. பானர்ஜி, திரு. விக்டர் வால்சா போன்ற அகில இந்திய பெடரேஷனின்
தலைவர்களைத் திரு. மோகன் நினைவு கூறுகிறார். அவர்களுடைய உதவிகளும், பெடரேஷன்
உறுப்பினர்களுடைய ஒத்துழைப்பும் தான் தன்னுடைய அகில இந்திய பணிகளின் வெற்றிக்குக்
காரணம் என்று கூறுகிறார். இவருடைய தலைவர் பதவிக் காலத்தில் பெடரேஷன் அலுவலகத்திற்கென
பிரத்தியேகமான கட்டிடம் பம்பாயில் கட்டப்பட்டது. இந்த சாதனைகளையும் அவருடைய சாதனைப்
பட்டியலில் சேர்ப்பது மிகையாகாது.
இவ்வாறாக திரு.மோகன் பின்னலாடைத் தொழிலுக்கு ஆற்றிய அரிய பெரிய பணிகளையும்,
நிகழ்த்திய சாதனைகளையும் அடுக்கிக் கொண்டே போகலாம். ஆனால் மிகவும் முக்கியமான
சிலவற்றை இங்கு குறிப்பிடுதல் பொருத்தமாகும்.
A.E.P.C. யின் கிளை அலுவலகம் ஒன்று திருப்பூரில் திறப்பதற்குப் பாடுபட்டது மட்டுமல்லாமல்
அந்த அலுவலகத்திற்குச் சொந்தமான கட்டிடமொன்று தோற்றுவித்த சாதனை திரு. மோகன்
அவர்களை சார்ந்தது.
மக்களின் தலைவராக 1996-ம் ஆண்டு நடைபெற்ற சட்ட மன்ற
பொதுத் தேர்தலில் கோவை மாவட்டம் பொங்கலூர் தொகுதியில் சட்ட
மன்ற உறுப்பினராக நின்று 19,600- கும் மேற்பட்ட வாக்குகள்
வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி பெற்று பொங்கலூர் தொகுதியின்
சட்டமன்ற உறுப்பினராக(MLA) பதவியில் அமர்ந்தார்.
ஐயா அவர்கள் MLAவாக இருக்கும் முன்பே கோயம்புத்தூர்,திருப்பூர்
வட்டாரங்களில் உள்ள ஏழை மக்களுக்குச் செய்து வந்த நலப்பணிகளை,
MLA ஆன பிறகு ஆக்க பூர்வமாக மேலும் தொடர்ந்து செய்து வந்தார்.
விவசாயிகளின் துயர் துடைக்க 2000-ம் ஆண்டில் "ஒரு மடை விட்டு
ஒரு மடை நீர் பாசனம்"வேண்டும் என்று ஆழியார் அணையில் இருந்து
பொங்கலூர் வரை சுமார் 120 கிலோமீட்டர் வரை ஆறு நாட்களாக நடந்து
சென்று மக்களின் வறுமை நிலையை அரசாங்கத்திற்கு எடுத்துக்
கூறினார்.அதன் விளைவாக அரசு அவரின் கோரிக்கைகளை
நிறைவேற்றியது. ஆயிரம் ஆயிரம் விவசாயிகளின் வாழ்வில்
வசந்தத்தைத் தந்த மாமனிதர் ஆனார்.
மக்களின் தலைரான ஐயா சட்ட மன்ற உறுப்பினராக இருந்த காலத்தில்
நீதி முறை தவறாது அரும்பணிகள் செய்ததைக் கண்டும். ஐயாவின் இளம்
வயதில் திருப்பூரில் பனியன் தொழில் துறையின் மூலமாக பல
எண்ணற்ற வேலைவாய்புகளை ஏற்படுத்தி மக்களின் வாழ்வில் தீபத்தை
ஏற்றியதால் ஐயாவிற்கு R.வெங்கட்ராமன்,நேரு,ராஜாஜி,இந்திரா
காந்தி,ராஜீவ்காந்தி,காமராஜர்,ஜி.கே.மூப்பனார்,எம்.ஜி.ஆர்,கருணாநிதி, ஜெய
லலிதா,அப்துல் கலாம், கண்ணதாசன் சிவாஜி கணேசன் மற்றும்
சிவக்குமார் போன்ற பல்வேறு தலைவர்களுக்கும்,நடிகர்களுக்கும்
நேசத்திற்குரியவர் ஆனார்.
மோகன் கந்தசாமி ஐயாவிற்கும்,கண்ணதாசனுக்கும் இருந்த நட்பு)
சிறப்பு வாய்ந்த ஒன்று. மாபெரும் கவிஞர் கண்ணதாசன், நண்பர் மோகன்
கந்தசாமி இல்லத்திற்கு வந்து அவரிடம் பழகிய விதம் சங்ககாலத்தில்
தமிழக அரசு நிறுவியுள்ள தொழில் வளர்ச்சிக் கமிட்டியில் சிறு தொழில்கள் மற்றும்
பின்னலாடைத் தொழில்களின் பிரதிநிதியாக உறுப்பினர் பதவி வகிக்கிறார்.
தமிழ்நாடு சுற்றுப்புறச் சூழல் கெடுதல் தடுப்பு வாரியத்திலும் (Pollution Control Board) இவர்
உறுப்பினராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.
இவர் தொழில் துறைகளுக்கு ஆற்றிய பணிகளுக்குப் பரிசாகத் தமிழ்நாடு வர்த்தக கழகம்
இவருக்கு "வர்த்தக திலகம்" என்கிற பட்டம் சூட்டிக் கௌரவித்திருக்கிறது. பட்டம் சூட்டும் விழா
சென்னையில் நடந்தது. ஆனால், திரு. மோகன் அங்கு சென்றுசேர இயலவில்லை. எனவே, தலைவர்
திரு. கேசவலால் சங்கத்தின் சிறப்புக்கூட்ட மொன்றினை ஈரோட்டில் கூட்டி திரு. மோகனுக்கு
அந்த கௌரவ விருதை வழங்கினார்.
திரு. மோகனுடைய பொதுவாழ்க்கையில் பல துறைகளில் ஈடுபாடு உண்டு. அவர் செய்த
சாதனைகளும் பல. சிலவற்றை இங்கு நினைவுகூர்தல் சிறந்தது.
ஆன்மீகத் துறையில் இவருக்கு ஈடுபாடு உண்டு. கொங்கணகிரி முருகன் கோவிலின்
திருப்பணிகளை இவர் செய்து முடித்தார். பேரூர், திருமுகன் பூண்டி, பொங்கலூர் முதலிய
ஊர்களிலுள்ள கோவில்களுக்கும் திருப்பணிகள் ஆற்றிவருகிறார். வள்ளலார் கழகங்களிலும்,
ஆலயங்களிலும் இவருக்கு ஈடுபாடு உண்டு. பழநி தண்டாயுதபாணி என்று கூறினாலே இவருடைய
மனம் பரவசமாகிவிடும்.
சமூக சேவையிலும் இவருக்கு ஈடுபாடு உண்டு. அரிமா சங்கத்தின் வாயிலாக உடல்நல
ஆய்வுத் திட்டங்களை (Medical Check-up Camps) செயல்படுத்தியிருக்கிறார். இந்தப் பணிகளுக்கு
திண்டுக்கல், மதுரை போன்ற இடங்களிலிருந்து மருத்துவர்களையும் நிபுணர்களையும் வரவழைத்து
மேற்கூறிய முகாம்களை நடத்தியிருக்கிறார்.
மேலும் விளையாட்டுத் துறையிலும் இவருக்கு ஈடுபாடுகள் உண்டு. மாநில அளவிலான
கூடைப் பந்து (Basket Ball, Volley Ball) கால்பந்து போன்ற விளையாட்டுப் போட்டிகளை திருப்பூரில்
நடத்தி இருக்கிறார். இந்த விளையாட்டுச் சங்கங்களின் தலைவராகவும் இதர பொறுப்பாளராகவும்
பணிபுரிந்து வருகிறார்.
திருப்பூர் நகர வளர்ச்சிக்காகவும் மேம்பாட்டிற்காகவும் சேவைகள் பல புரிந்து வருகிறார்.
நகரசபை நிர்வாகத்துடன் இவருக்கு நெருங்கிய தொடர்பு உண்டு. நகர வளர்ச்சித் திட்டங்கள்
தீட்டுவதிலும் செயல்படத்துவதிலும் கணிசமான பங்கு பெற்றுச் சேவைகள் பல புரிந்து வருகின்றார்.
இவருடைய வெற்றிக்கு சங்க உறுப்பினர்கள் பலரையும் சங்கத்தின் முன்னாள்
தலைவர்களையும் அவர்களுடைய ஒத்துழைப்புக்காக நன்றியுடன் நினைவு கூறுகிறார். அவருடைய
நன்றிக்கடன் சிற்பி திரு. நாராயணசாமி, திரு. கார்த்திகேயன், ஒலிம்பிக் திரு. சுவாமிநாதன்,
நகரமன்றத் தலைவர் திரு. கந்தசாமி மற்றும் பல பிரமுகர்களுக்கு உரித்தாகும் என்று கூறி சங்கம்
வளர்ந்து சேவைகள் பல செய்திட இறைவனைப் பிராத்திக்கின்றார்.
மோகன் கந்தசாமி அவர்கள் ஆவார். ஒரு சமயம் சைமா சங்கத்தின்
ஊழியர்கள் ஊதிய உயர்வு கேட்டு வீட்டு வாசலின் முன்பு பந்தல் போட்டு 1
எதிர்ப்பு கோஷம் போட்ட போதும் ஐயா புன் முறுவலோடு எதிர்க்
கொண்டு அவ்வூழியர்கள் மனதில் நாம் ஏன் இவ்வாறு செய்தோம் என்று
மன மாற்றத்தை ஏற்படுத்தினார்.
திருப்பூரில் முதல் மேயராக தேர்ந்தெடுக்கப்பட்ட செல்வராஜ்
அவர்களுக்கு இரண்டே நாளில் 120 - பவுன் தங்க சங்கிலியைச் செய்து
கொடுத்த பெருமைக்குரியவர் ஆவார்.
ஐயா மோகன் கந்தசாமி ஐயாவின் சமூக நலனில் குறிப்பிடத்தக்க
ஒன்று கல்வி பணியாகும். நம்மைச் சுற்றி உள்ள குழந்தைகள் கல்வி
சிறந்து விளங்க பேரார்வம் கொண்டவர் ஆவார். பல மாணவர்களை
உருவாக்கியும் அவர்களின் கல்வி வளர உதவி செய்தவர். மேலும் இன்று
திருப்பூரில் காணப்படும் கல்வியாளர்கள் பலர் கல்வி பயில உதவி
செய்தவர் ஐயா மோகன் கந்தசாமி ஆவார்.
பல அரசியல் தலைவர்களைத் திருப்பூரில் உருவாகியதால்
இவர் மக்களிடையே காமராசரைப் போன்றவர் என்ற எண்ணம் வளரும்
வகையில் பல தலைவரைத் தந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தன் வாழ்நாள் முழுவதும் மக்களுக்காகவே வாழ்ந்து,
மக்களின் வளர்ச்சியே தன் வளர்ச்சி என்று வாழ்ந்த மோகன் கந்தசாமி
ஐயா 2008-ம் ஆண்டு நவம்பர் 7-ம் நாளில் இறைவனடி சேர்ந்தார்.
இருப்பினும் தன் இறுதி மணித்துளிகளில் கூட தன்னை
நாடி வந்தவர்களுக்குத் தான் செய்ய வேண்டிய பணிகளைச் செய்து
கொடுத்து விட்டு அதன் பின்பு மருத்துவமனைக்குச் சென்றார். பிறகு
மருத்துவமனையில் கம்பீரமாக நடந்தே சென்ற விதம் இன்றும் அவரது .
குடும்பத்தாரின் கண்களில் நீங்கா வண்ணம் இருப்பது குறிப்பிடத்தக்கது.
" வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி மக்கள் மனதில்
நின்றவர் யார்? " என்ற கண்ணதாசனின் வரிகள் இன்றும் மக்கள் மனதில்
கோப்பெருஞ்சோழனுக்கும், பிசிராந்தையாருக்கும் இருந்த நட்பைப்
போன்றே இவர்கள் நட்பும் உலக பிரசத்தி பெற்றது என்பது சிறப்பு
வாய்ந்த நிகழ்வு ஆகும்.
திருப்பூரில் அப்துல் கலாம் அவர்களைக் கெளரவிக்கும் விழாவில்
"இளைஞர்களின் எழுச்சி நாயகன்" அப்துல் கலாம் அவர்கள் ஐயா
மோகன் கந்தசாமியின் எளிமையான தோற்றத்தைக் கண்டு முருகனுக்கு
மயில் வாகனம், நான் உங்களுக்கு வாகனம் என்றும் தாங்கள்
எப்பொழுது கூப்பிட்டாலும் கூப்பிட்ட குரலுக்கு மயிலாக வருவேன் என்று
கூறினார். அச்சமயம் இந்தியாவே அப்துல் கலாமின் புகழ் பாட அப்துல்
கலாம் ஐயாவைப் புகழ்ந்த அந்த நிகழ்வு அங்கு கூடி இருந்த மக்கள்
அனைவரையும் நெகிழ்வுற செய்தது.
திருப்பூரில் பனியன் தொழிலில் திடீர் என்று உற்பத்திப் பொருட்கள்
தட்டுப்பாடு நிலையானது ஏற்பட்டது.அதனால் திருப்பூரில் தொழில்
தொய்வு நிலைக்குத் தள்ளப்பட்டது. அச்சமயத்தில் அன்றைய சைமா
சங்கத்தின் தலைவர் மோகன் கந்தசாமி அவர்கள் மேலை நாடான
லூதியானா என்ற நாட்டிலிருந்து உற்பத்தி பொருள்களைப் பல
லட்சத்திற்கு இறக்குமதி செய்து அந்த பொருட்களைப் தொழில்
நிறுவனங்களுக்குச் சரியாக பிரித்துக் கொடுத்து அந்நிறுவனங்கள்
தொடர்ந்து இயங்க பெரிதும் உதவி செய்தார்.
இக்கடின சூழ்நிலையில் சைமா சங்க தலைவர் ஐயா மோகன்
கந்தசாமி அவர்கள் அனைத்து தொழில் நிர்வாகிகளிடம் பாரபட்சம் இன்றி
சமநோக்குடன் நடந்துக் கொண்டார்.
2007-ம் ஆண்டு பழனி திருக்கோயிலின் அறங்காவலராக
தேர்ந்தெடுக்கப்பட்டு கோவிலுக்குப் பல்வேறு நலத்திட்டங்களைச்
செய்தார்.
சைமா தலைவராக 42 ஆண்டுகள் இருந்து மக்களின்
பிரச்சனையைத் தன் பிரச்சனை என்று எண்ணிய உன்னத மனிதன் ஐயா வாழ்ந்து வரும் ஐயா மோகன் கந்தசாமி அவர்களுக்கும் முற்றிலும்
பொருந்தும்.
ஐயாவின் பண்பு, எளிமை, ஆதரவு குணம், ஈகை, கடின
உழைப்பு, சமத்துவம் போன்ற நற்குணங்களையும், அயராத பணிகளைக்
கண்டு, ஐயாவிற்கு சைமா சங்கக் கட்டிடத்தின் வெளி அரங்கத்தில் மார்பு
அளவு வெண்கலச் சிலை அமைத்துள்ளனர். அன்று முதல் திருப்பூரின்
"பீஷ்மர்' என்று இன்று வரை அன்போடு அழைத்து வருகின்றனர்.
வாழ்க! வளர்க!
மோகன் கந்தசாமியின் புகழ்!
என்றும்! எப்பொழுதும்!
உங்கள் ஆசியோடு!
உமது மக்கள்